ஆசிய விளையாட்டுப் போட்டியில் அசத்தல்! பி.டி.உஷா சாதனையை சமன் செய்தார் தமிழக வீராங்கனை!

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்
தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்

தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதலில் 55.42 விநாடிகளில் இலக்கை அடைந்து வித்யா ராம்ராஜ் சாதனை இன்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் 3000 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் இன்று கிடைத்துள்ளது. ஆரத்தி கஸ்தூரி ராஜ், ஹீரல், சஞ்சனா, கார்த்திகா ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

ஆர்யன்பால், ஆனந்த், சித்தாந்த், விக்ரம் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் இந்தி அணி மொத்தம் 55 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. இதில் 13 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in