ஆசிய விளையாட்டு போட்டி... குண்டு எறிதலிலும் இந்தியா தங்கம் வென்றது!

தஜிந்தர் பால் சிங்
தஜிந்தர் பால் சிங்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வாகை சூடி, பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் அவினாஷ் சாப்ளே 8 நிமிடம் 19.54 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்றார்.

தஜிந்தர் பால் சிங்
தஜிந்தர் பால் சிங்

அடுத்ததாக குண்டு எறிதல் போட்டியில் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கம் வென்றுள்ளார். 20.36 மீ தொலைவுக்கு குண்டை எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். முந்தைய 2018-ம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியிலும் குண்டு எறிதல் பிரிவில் தஜிந்தர் சிங் தங்கம் வென்றிருக்கிறார்.

இதன் மூலம் இந்தியா 13 தங்கப் பதக்கம்,18 வெள்ளி, 18 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 49 பதக்கங்களை குவித்து 4வது இடத்தில் நீடித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in