இந்தியாவுடன் மீண்டும் மோதும் பாகிஸ்தான்: ஆசியக் கோப்பை சூப்பர் 4 அட்டவணை

இந்தியாவுடன் மீண்டும் மோதும் பாகிஸ்தான்: ஆசியக் கோப்பை சூப்பர் 4 அட்டவணை

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் மோதும் அணிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றிருந்தன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றிருந்தன. லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சூப்பர் 4 சுற்றின் அட்டவணை:

செப்டம்பர் - 3 : இலங்கை - ஆப்கானிஸ்தான்

செப்டம்பர் - 4 : இந்தியா - பாகிஸ்தான்

செப்டம்பர் - 6 : இந்தியா - இலங்கை

செப்டம்பர் - 7 : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

செப்டம்பர் - 8 : இந்தியா - ஆப்கானிஸ்தான்

செப்டம்பர் - 9 : இலங்கை - பாகிஸ்தான்

சூப்பர் 4 சுற்றிலிருந்து முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in