25 வயதில் நம்பர் ஒன் வீராங்கனை திடீர் ஓய்வு
ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி

25 வயதில் நம்பர் ஒன் வீராங்கனை திடீர் ஓய்வு

டென்னிஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியா ஆஷ்லி பார்ட்டி ஓய்வை அறித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி. குறுகிய காலத்தில் 15 சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற 25 வயதான ஆஷ்லி, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன் கோப்பை, 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் கோப்பை ஆகியவற்றை வென்று சாதனை படைத்திருந்தார். 121 வாரங்களாக உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்து வந்த ஆஷ்லி திடீரென ஆய்வை அறிவித்துள்ளார்.

"தனக்கு தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் ஆஷ்லி கூறியுள்ளார். மேலும் அவர், டென்னிஸ் விளையாட்டை தான் மிகவும் நேசிப்பதாகவும், தனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் தனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீராங்கனை ஓய்வை அறிவிப்பது இது 2-வது முறையாகும். 2008-ம் ஆண்டு தரவரிசையில் முதலிடத்திலிருந்த ஜஸ்டின் ஹெனின் ஆய்வு அறிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in