ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கூலித் தொழிலாளி; இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

ராம் பூபா தடகள வீரர்
ராம் பூபா தடகள வீரர்
Updated on
1 min read

அண்மையில் சீனாவில் நடத்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்தியா 107 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெற்றி பெற்று நாடு திரும்பிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ராம் பாபூவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மஹிந்திரா கார்களில் இருந்து ராம் தனக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என்றும், அவருக்கு ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம் தினசரி கூலி வேலைக்கு சென்ற ராம் இன்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவரது இந்த பயணத்திற்கு தனது பாராட்டுகளையும் ஆன்ந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ராம் பாபு, உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். தந்தையைப் போலவே இவரும் ஒரு கூலித் தொழிலாளியாக தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். பாபுவிற்கு மூன்று சகோதரிகள் உண்டு, மாதம் 3000 ரூபாய் முதல் 3500 மட்டுமே ஈட்டக்கூடிய மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்த ராம் பாபு, தனது தடகள கனவை நிறைவேற்ற பல ஓட்டல்களில் சர்வராகவும் பணி செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in