பாரா ஆசிய விளையாட்டில் அசத்தும் இந்திய வீரர்கள்! வெள்ளிப்பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

பாரா ஆசிய விளையாட்டில் அசத்தும் இந்திய வீரர்கள்! வெள்ளிப்பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

சீனாவில் நடந்து வரும் 'பாரா' ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை துவக்கி உள்ளது.

சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு போட்டி நேற்று (அக்., 22) கோலாகலமாக துவங்கியது. 4 நாடுகளை சேர்ந்த, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலமும் வென்றனர். மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in