காற்றுமாசு எதிரொலி: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

மைதானத்தில் வாண வேடிக்கை
மைதானத்தில் வாண வேடிக்கை
Updated on
2 min read

காற்றுமாசு காரணமாக டெல்லி மற்றும் மும்பை மைதானங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை முடிவடைந்துள்ள நிலையில் மத்திய மற்றும் வட இந்தியாவில் பனிக்காலம் துவங்கியுள்ளது. இந்த கால கட்டத்தில் தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காற்றின் மாசு அதிகரித்து காணப்படும். பனிக்காலத்தில் வாகனம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பல்வேறு மாசுக்கள் கீழடுக்கு காற்று மண்டலத்திலேயே தங்கிவிடுவதால் மற்ற காலங்களைவிட காற்றின் தரம் குறைந்து மாசுடன் காணப்படுகிறது.

மைதானத்தில் வாண வேடிக்கை
மைதானத்தில் வாண வேடிக்கை

தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரை மேலும் வண்ணமயமாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் மைதானங்களில் வாண வேடிக்கைகள் நடத்தப்படுகிறது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், டெல்லி, மும்பை நகரங்களில் காற்றில் மாசு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இனி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளின் முடிவில் வெடிகள் வெடிக்கப்படமாட்டாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஜெய்ஷா பிசிசிஐ செயலாளர்
ஜெய்ஷா பிசிசிஐ செயலாளர்

இதுகுறித்து விளக்கமளித்த பிசிசிஐ பொதுச்செயலாளர் ஜெய்ஷா, இந்திய கிரிக்கெட் வாரியம் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும், அதன் பொருட்டு இனி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது என்றும் இதுகுறித்து ஐசிசியிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். மும்பையில் இன்னும் இரண்டு லீக் போட்டிகளும், நவம்பர் 15ம் தேதி ஒரு அரையிறுதி போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in