மழையால் கைவிடப்பட்டது ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம்: புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன?

மழையால் கைவிடப்பட்டது ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம்: புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன?

மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவிருந்தன. ஆனால் பெல்போர்ன் மைதானத்தில் தொடர்ந்து பொழியும் மழை காரணமாக டாஸ்கூட போடப் படாமல் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. முந்தைய போட்டியில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்திய தெம்பில், இந்த போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் இருந்தது அயர்லாந்து அணி.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி தோற்றது ஆப்கானிஸ்தான் அணி. நியூசிலாந்துக்கு எதிரான இந்த அணியின் இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இப்போது 3வது போட்டியும் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி தலா 2 புள்ளிகளுடன் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடனும் கடைசி இடத்தில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in