தெறிக்கவிட்ட ஆப்கானிஸ்தான் பவுலர்கள்; திணறிய இலங்கை... 241 ரன்கள் இலக்கு!

தெறிக்கவிட்ட ஆப்கானிஸ்தான் பவுலர்கள்; திணறிய இலங்கை... 241 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய 30வது உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 241 ரன்களை எடுத்தது.

புனேவில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி டாஸ் வென்று இலங்கைக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் இலங்கை விளையாடியது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அரையிறுதிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளன. மேலும் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்பிக்க அவர்களுக்கு இந்த வெற்றி முக்கியமானது. ஆப்கானின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் தனது 100 வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 241 ரன்களை எடுத்தது.

முதலில் பேட் செய்த இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா 46 ரன்களும், கேப்டன் குசல் மென்டிஸ் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

திமுத் கருணாரத்னே 15 ரன்களில் நடையைக் கட்டினார். சதீரா சமரவிக்ரம 36 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சரித் அசலங்கா 22 ரன்களில் கேட்ச் ஆனார்.

தனஞ்செய டி சில்வா (22 ரன்கள்), தீக்ஷனா (29 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கன் பவுலர் முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 10 ஓவர்களை வீசி 50 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். பரூக் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை தூக்கினார். ஒரு மெய்டன் ஓவர் உள்பட வெறும் 34 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 242 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து பேட்டிங் செய்யவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in