குழந்தைகளை தெருவில் விளையாட விடுங்கள்!

குழந்தைகளை தெருவில் விளையாட விடுங்கள்!

மாலை நேரங்களில் உங்கள் வீட்டருகே உள்ள தெருக்களிலோ, பூங்காக்களுக்கோ சென்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தைகளின் சத்தத்தால் நிறைந்திருந்த அவை இப்போது நிசப்தமாக இருப்பதைப் பார்க்க முடியும். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பூங்காக்கள் இன்று பெரியவர்கள் நடைப் பயிற்சி செய்வதற்கான இடமாக மாறிக்கிடப்பதை உள்வாங்க முடியும். சிறு வயதில் ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகள்... குறிப்பாக நகரத்துக் குழந்தைகள் கல்விச் சுமையின் பிடியிலும், ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடும் தொழில்நுட்ப விளையாட்டுகளின் பிடியிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

‘மாலை முழுதும் விளையாட்டு’ என்ற மகாகவி பாரதியின் வாக்கு, இன்று வீடியோ கேம், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் என்று சுருங்கிப் போய் குழந்தைகளின் உடல் நலனுக்கே கேடாக அமைந்துள்ளன. இதனால், கண்ணுக்குத் தெரியாத பல்வேறு பாதிப்புகளை வளரும் அந்த மொட்டுகள் சந்தித்து வருகின்றன!

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், செல்போன் விளையாட்டுகள் இவையெல்லாமே இருந்த இடத்தைவிட்டு நகராமல் ஆடும் ஆட்டங்களாக இருப்பதால் உடல் உழைப்புக்கு அதிக வாய்ப்பு இல்லை. இதனால், ஏற்கெனவே ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றால் எடை அதிகரிக்கும் குழந்தைகள், உடல் உழைப்பின்மையால் மேலும் குண்டாகும் அபாயம் உள்ளது. உடல் உழைப்புகள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபட்டால் குழந்தைகளுக்கு அசதியால் இரவில் நல்ல உறக்கம் வரும். ஆனால், இப்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு ஓடியாடி விளையாடும் வாய்ப்புகளே அமையாததால், சரியான தூக்கத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் திரைகளையே பார்த்துக்கொண்டிருப்பதால் கண் பார்வையும் பாதிக்கப்படுகிறது.

குழு விளையாட்டுகளை ஊக்கப்படுத்துங்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in