இரண்டுமுறை சாம்பியனான அணியை அலறவிட்ட அயர்லாந்து: உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள்!

இரண்டுமுறை சாம்பியனான அணியை அலறவிட்ட அயர்லாந்து: உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மேற்கிந்திய தீவுகள்!

இன்று நடைபெற்ற அயர்லாந்திற்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தால், இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அயர்லாந்து அணி மோதியது. வாழ்வா சாவா என்ற நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து ஜான்சன் சார்லஸ் 24 ரன்னிலும், லெவிஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ப்ராண்டன் கிங் மட்டும் நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அதற்கடுத்து கேப்டன் பூரன், பவல், ஸ்மித் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிங் மட்டும் 66 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணியின் கரேத் டெலானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் பால்பிர்னீ ஆகியோர் நிலைத்து ஆடி அணியை வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்றனர். 37 ரன்களில் பால்பிர்னீ ஆட்டமிழந்த நிலையில் களமிறங்கிய லார்கன் டக்கரும் அதிரடியாக விளையாடினார். இதனால் 17.3 ஓவர்களில் அந்த அணி 150 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 66 ரன்களும், டக்கர் 45 ரன்களும் எடுத்தனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டெலானி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக லீக் சுற்றின் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் தலா 2 புள்ளிகள் பெற்றிருந்ததால் யார் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற பரபரப்பு நிலவிலது. இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்றதன் மூலமாக, அயர்லாந்து லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in