வேதனையைத் தீர்க்கும் ஏகாதசி மந்திரம்

வேதனையைத் தீர்க்கும் ஏகாதசி மந்திரம்
Ramji V

ஏகாதசி திதி நாளில், பெருமாளை தரிசிப்பதும் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி வேண்டிக்கொள்வதும் பெருமாளுக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி பாராயணம் செய்வதும் வாழ்வில் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

திதிகள் ஒவ்வொன்றும் விசேஷம். சிவபெருமானுக்கு உரிய திதி நாளாக திரயோதசி போற்றப்படுகிறது. அதேபோல் பெருமாளுக்கு உகந்த திதி நாளாக, ஏகாதசி முக்கியத்துவம் பெறுகிறது.

மாதந்தோறும் வருகிற ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளைத் தரிசிப்பார்கள். வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி இரண்டுமே விசேஷம்தான் என்றாலும் சுக்லபட்ச ஏகாதசி என்று சொல்லப்படும் வளர்பிறை ஏகாதசி இன்னும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

ஏகாதசி நாளில் விரதம் இருந்து திருமாலைத் தரிசிக்கலாம். இயலாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசித்தாலும் பலன் நிச்சயம். பெருமாளுக்கு இந்தநாளில் துளசி மாலை சார்த்துவதும் பிரசாதமாக வழங்கப்படும் துளசி தீர்த்தத்தைப் பருகுவதும் சகல வளங்களையும் தந்தருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இன்று ஆகஸ்ட் 8-ம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி. இந்தநாளில், ஏகாதசி விரதமிருக்கலாம். அருகில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் கண்ணாரத் தரிசிக்கலாம்.

அப்போது, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஸ்ரீமந் நாராயணனை தரிசியுங்கள். வீட்டில் பெருமாள் படமோ விக்கிரகமோ இருந்தால், துளசி மாலை சார்த்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

ஓம் கேசவாயநம,

ஓம் நாராயணாயநம,

ஓம் மாதவாயநம,

ஓம் கோவிந்தாயநம,

ஓம் விஷ்ணுவேநம,

ஓம் மதுசூதனாயநம,

ஓம் த்ரிவிக்ரமாயநம,

ஓம் வாமனாயநம,

ஓம் புருஷோத்தமாயநம,

ஓம் ஸ்ரீதாராய நம,

ஓம் அதோஷஜாயநம,

ஓம் ஹ்ருஷீகோசய நம,

ஓம் நரசிம்ஹாயநம,

ஓம் பத்மனாபாயநம,

ஓம் அச்யுதாயநம,

ஓம் தாமோதராயநம,

ஓம் ஜனார்த்தனாயநம,

ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,

ஓம் உபேந்த்ராயநம,

ஓம் வாஸூதேவாயநம,

ஓம் ஹரயேநம,

ஓம் ப்ரதுய்ம்னாயநம,

ஓம் க்ருஷ்ணாயநம

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, மனதார வேண்டிக்கொண்டால் நம் வேதனைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் வேங்கடவன். துக்கங்களையெல்லாம் போக்கியருளுவான் பரந்தாமன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in