திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! 2023ல் தடைகள் விலகும்; நிம்மதி உண்டு; மனக்கசப்பு மாறும்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

திருவாதிரை நட்சத்திர அன்பர்களே! 2023ல் தடைகள் விலகும்; நிம்மதி உண்டு; மனக்கசப்பு மாறும்!

திருவாதிரை நட்சத்திர அன்பர்களே!

வீண் பிரச்சினையால் இதுவரை இருந்த மனக்குழப்பம் இந்த ஆண்டில் அகலும். பயணங்களில் வேகம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடைகள் விலகும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தடை தாமதம் நீங்கும். போட்டிகளை சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கிலேசங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும்.

பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.

கலைத்துறையினருக்கு புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அரசியல் துறையினர், வேலையாக முக்கிய நபர்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயலுவீர்கள். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது. நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதையும், அடுத்தவர் பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படலாம். கவனமாகப் படிப்பது நல்லது.

பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். மனக்கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in