திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் - ஹனுமன் வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் - ஹனுமன் வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்
TTD PHOTO

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம், இந்த ஆண்டும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏகாந்தமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதனால், வழக்கமாக மாடவீதிகளில் நடைபெறும் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கடந்த 7-ம் தேதி முதல், வாகன சேவைகள் காலையும், இரவும் நடைபெற்று வருகின்றன.

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று காலை, ஹனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்பர் கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பெரிய மற்றும் சிறிய ஜீயர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள் முதலானோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.