திருப்பதி பிரம்மோற்சவம் 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்

திருப்பதி பிரம்மோற்சவம் 8-ம் நாள்: சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்
TTD_PHOTO

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளான இன்று, ஏழுமலையான் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளினார்.

வழமையான நாட்களில் காலை தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால், கரோனா காரணமாக மாடவீதிகளில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இம்முறை தங்கத் தேரோட்டம் மற்றும் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. இதனால், பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை தேரோட்டத்துக்குப் பதில், கோயிலுக்குள்ளேயே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், ஜீயர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in