சனிப்பெயர்ச்சி 2023 நட்சத்திர பலன்கள்; ஒற்றை வரி ‘பஞ்ச்’ பலன்கள்; உங்கள் மதிப்பெண்; வழிபட வேண்டிய தெய்வங்கள்!

சனிப்பெயர்ச்சி 2023 நட்சத்திர பலன்கள்;  ஒற்றை வரி ‘பஞ்ச்’ பலன்கள்; உங்கள் மதிப்பெண்; வழிபட வேண்டிய தெய்வங்கள்!

குருப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என கிரகங்கள் ஒவ்வொரு முறையும் நகர்ந்து நம் ஜாதகத்திற்குத் தக்கபடி சாதகங்களையும் பாதகங்களையும் வழங்கிக் கொண்டிருக்கும். இதைத்தான் கர்மா என்றும் கர்மவினை என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

குருப்பெயர்ச்சியின் போதும், ராகு - கேது பெயர்ச்சியின் போதும் நாம் யாரும் பெரிதாக பயப்படமாட்டோம். ஆனால் சனி பகவானின் பெயர்ச்சி நடக்கிறது என்றால், ‘இந்த முறை நமக்கு என்ன செய்யப் போகிறார் சனிபகவான்’ என்று மனதுக்குள் ஒருவித கிலியுடன் பலன்களை அணுகுகிற வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அதற்குக் காரணமும் இருக்கிறது.

நாம் செய்கின்ற நன்மைகளாகட்டும் தீமைகளாகட்டும். இந்த இரண்டுக்குமே எதிர்வினைகள் உண்டு. முன் ஜென்ம நன்மைகளுக்கும் தீமைகளுக்குமே விளைவுகள் இருக்கும்போது, இந்த ஜென்மத்தில் நம் செயல்களைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சனி பகவான், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக, ஒரு தெய்வமாக மட்டுமே இருப்பவரில்லை. சனி பகவானை நீதிபதி ஸ்தானத்தில் வைத்து புராணங்களும் ஜோதிடங்களும் விவரிக்கின்றன. நாம் செய்த நன்மைகளுக்கு நம்மை விடுவித்து, நம் வாழ்வில் நல்ல தீர்ப்பை வழங்கி அருளுபவரும் அவர்தான். அதேசமயம், நாம் தெரிந்தோ தெரியாமலோ, முக்கியமாக, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த தவறுகளுக்கு உரிய தண்டனையை பாரபட்சமே இல்லாமல் வழங்கக் கூடியவர் சனி பகவான். அதனால்தான் நீதிமான் என்றும் நீதிபதி என்றும் போற்றுகின்றன புராண நூல்கள்.

சனிப்பெயர்ச்சியானது, 2023 ஜனவரி 17ம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகின்றன?

சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார். மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷம் நீச்ச வீடு. சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதைக் கொண்டு, உங்களின் தசாபுத்தியைக் கணக்கில் கொண்டு, பலன்களில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம். அதேவேளையில், சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்குவதற்கும் எளிமையான பரிகாரங்களும் இருக்கின்றன. எனவே பயமோ கவலையோ வேண்டாம்!

இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் 27 நட்சத்திரக்காரர்களுக்கான ஒற்றைவரியில் பலன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டரை வருடங்கள் நிகழப்போகும் உங்கள் வாழ்க்கைக்கான மதிப்பெண் எவ்வளவு என்பதையும் ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் செய்யவேண்டிய வழிபாடுகள் என்னென்ன என்பதையும் இதோ... இங்கே தெரிவித்துள்ளேன்.

இதையடுத்து, 27 நட்சத்திர அன்பர்களுக்கான விரிவான சனிப்பெயர்ச்சி பலன்களையும் தருகிறேன்.

27 நட்சத்திர அன்பர்களுக்கான ஒற்றைவரி ‘பஞ்ச்’ பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கான மதிப்பெண்... வழங்கியுள்ளேன்.

அஸ்வினி - குலதெய்வ வழிபாடு - எதிலும் வெற்றி - 100க்கு 74

பரணி - துர்கை - பொருளாதாரம் உயரும் - 100க்கு 72

கார்த்திகை - முருகன் - முயற்சி திருவினையாக்கும்! 100க்கு 76

ரோகிணி - கிருஷ்ணர் - நல்ல மாற்றம் நிச்சயம்! - 100க்கு 81

மிருகசீரிஷம் - நந்திதேவர் - சுபவிரயம் உண்டு - 100க்கு 82

திருவாதிரை - நடராஜர் - அசத்தலான லாபம்! - 100க்கு 75

புனர்பூசம் - ஸ்ரீராமர் - வீட்டில் சுபகாரியம் உறுதி! - 100க்கு 71

பூசம் - குபேரன் - முயற்சித்தால் வெற்றி உறுதி! 100க்கு 65

ஆயில்யம் - நாகர்தேவதை - வீடு மனை வாங்குவீர்கள்! - 100க்கு 68

மகம் - விநாயகர் - அதிர்ஷ்டம் நிச்சயம் - 100க்கு 70

பூரம் - ஆண்டாள் - கடனையெல்லாம் அடைப்பீர்கள் - 100க்கு 69

உத்திரம் - ஐயப்பன் - நம்பிக்கை கூடும்! 100க்கு 65

அஸ்தம் - ஆஞ்சநேயர் - பணவரவு உண்டு! - 100க்கு 70

சித்திரை - காவல்தெய்வம் - ஆரோக்கியம் கூடும்! - 100க்கு 71

சுவாதி - நரசிம்மர் - வீடு வாங்குவீர்கள்! - 100க்கு 68

விசாகம் - முருகன் - சந்தோஷம் பெருகும்! - 100க்கு 65

அனுஷம் - சித்தர்கள், மகான்கள் - மனக்குழப்பம் நீங்கும்! - 100க்கு 68

கேட்டை - மகாவிஷ்ணு - இருந்த தடைகளெல்லாம் நீங்கும்! - 100க்கு69

மூலம் - ஆஞ்சநேயர் - இனி, எதிலும் வெற்றிதான்! - 100க்கு 75

பூராடம் - துர்கை - சாதிக்கும் காலம் இது! - 100க்கு 72

உத்திராடம் - சிவன் - அரசு அனுகூலம் உண்டு! - 100க்கு 71

திருவோணம் - திருப்பதி பெருமாள் - வீட்டில் சுபகாரியம் உறுதி! - 100க்கு 72

அவிட்டம் - நவக்கிரகம் - சொத்து சேரும் காலம் இது! - 100க்கு 65

சதயம் - வாராஹி - ஆரோக்கியத்தில் முன்னேற்றம்! - 100க்கு 68

பூரட்டாதி - தட்சிணாமூர்த்தி - வழக்கில் ஜெயிப்பீர்கள்! 100க்கு 71

உத்திரட்டாதி - முன்னோர் வழிபாடு - பொறுப்புகள் கூடும்! - 100க்கு 63

ரேவதி - திருச்செந்தூர் முருகன் - பணம் சேமிப்பீர்கள்! - 100க்கு 72

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in