சனிப்பெயர்ச்சி: 12 ராசிக்காரர்களுக்கு எந்த சனியின் ஆதிக்கம்? என்னென்ன பலன்கள்?

சனிப்பெயர்ச்சி: 12 ராசிக்காரர்களுக்கு எந்த சனியின் ஆதிக்கம்? என்னென்ன பலன்கள்?

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோரும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

இந்த சனிப்பெயர்ச்சியால், எந்தந்த ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான கோணத்தில் சனி பகவான் ஆட்சி செய்கிறார் என்று பார்ப்போம்.

மேஷம் - லாபச்சனியாகத் திகழ்கிறார். இதனால் அதிக முயற்சிக்குப் பிறகு தொழிலிலும் உத்தியோகத்திலும் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம் - தொழில் சனியாகத் திகழ்கிறார். தொழிலிலும் பணியிலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மிதுனம் - பாக்கிய சனியாகத் திககிறார். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். நிதானம் அவசியம்.

கடகம் - அஷ்டம சனியாகத் திகழ்கிறார். இந்தக் காலகட்டத்தில், சகல விஷயங்களிலும் கவனமாக இருந்து செயல்படுவது நல்லது.

சிம்மம் - கண்டகச் சனியாகத் திகழ்கிறார். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கன்னி - ரண ருண சனியாகத் திகழ்கிறார். உடல்நலனில் அக்கறை அவசியம். சரியான நேரத்துக்கு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

துலாம் - பஞ்சம சனியாகத் திகழ்கிறார். குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு, அதனால் குடும்பத்தில் நிம்மதி இழக்க நேரிடும். கோபத்தைத் தவிர்ப்பதே உத்தமம்.

விருச்சிகம் - அர்த்தாஷ்டம சனியாகத் திகழ்கிறார். வீடு மனை வாகனம் வாங்குவதில் தடைகள் ஏற்படும். கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நிரந்தரம் தரும்.

தனுசு - தைரிய வீர்ய சனியாகத் திகழ்கிறார். மனதில் தைரியம் அதிகரிக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டு காரியங்களில் வெல்வீர்கள்.

மகரம் - வாக்குச் சனியாகத் திகழ்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் எவரிடமும் எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.

கும்பம் - ஜென்மச் சனியாகத் திகழ்கிறார். எந்தவொரு காரியத்தில் கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செயல்படுத்துவது நல்லது.

மீனம் - விரயச் சனியாகத் திகழ்கிறார். இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற விரயங்கள், திடீர் செலவுகள் ஏற்படும். உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். செலவு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in