புனர்பூச நட்சத்திர அன்பர்களே! 2023ல் பதவி உயரும்; கடன் தீரும்; திடீர் யோகம்; மதிப்பு கூடும்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
புனர்பூச நட்சத்திர அன்பர்களே! 2023ல் பதவி உயரும்; கடன் தீரும்; திடீர் யோகம்; மதிப்பு கூடும்!

புனர்பூசம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மரியாதை கூடும். திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

தொழில் மற்றும் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக் கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியிலான சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேடிக்கை கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினர் வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும்போது கவனம் தேவை. பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும்.

அரசியல் துறையினருக்கு மனக்குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும்போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் பிடிப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் துர்கை அம்மனை வணங்கி வாருங்கள். எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in