பூசம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் வேலையில் உயர்வு; பணவரவு; காரியத்தில் வெற்றி; வீடு மனை யோகம்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூசம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் வேலையில் உயர்வு; பணவரவு; காரியத்தில் வெற்றி; வீடு மனை யோகம்!

பூசம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். குரு பார்வை பலத்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த வசதி வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதில் தெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்குவன்மையால் காரியங்களில் வெற்றி உண்டு. ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

தொழில் ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். தொழில் மற்றும் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினர், நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியைத் திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன்களைத் தரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரவைப் பெற்றுத் தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மைகள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சஷ்டிக் கவசம் சொல்லி முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். நோய் நீங்கும். ஆரோக்கியம் கூடும். மனக்குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in