பரணி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நண்பர்களால் ஆதாயம்; வருமானம் கூடும்; குடும்பத்தில் சுபிட்சம்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரணி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நண்பர்களால் ஆதாயம்; வருமானம் கூடும்; குடும்பத்தில் சுபிட்சம்!

பரணி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவதுபோல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். ஐந்தாம் ராசியைப் பார்க்கும் குரு பகவான் மனநிம்மதியைத் தருவார். சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வியாபாரத்துக்காக புதிதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். பணி நிமித்தமாக அலைய வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்துசேரும்.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் பெருமாள் கோயில் அமைந்துள்ள தாயாரை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in