ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் செயலில் கவனம்;வீண் அலைச்சல்;  வேலைச்சுமை; நவக்கிரக குரு தரிசனம்!

ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் செயலில் கவனம்;வீண் அலைச்சல்; வேலைச்சுமை; நவக்கிரக குரு தரிசனம்!

ஆயில்யம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் வெளியூர் அல்லது வெளிநாடு பயண வாய்ப்புகள் கிடைக்கலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

தொழில் மற்றும் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். யோசித்துச் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் முதலானவை ஏற்படலாம்.

அரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலைச் சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை முல்லை மலர் சூடி வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வ நிலை உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in