கோயில் தேர் கவிழ்ந்து இருவர் பலி: 2 ஆண்டுகளுக்குப் பின் நடந்த திருவிழாவில் சோகம்

சரிந்து விழுந்திருக்கும் தேர்
சரிந்து விழுந்திருக்கும் தேர்

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோயில் தேர்த் திருவிழாவின்போது தேர் கவிழ்ந்து இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுந்து கிடக்கும் தேர்
விழுந்து கிடக்கும் தேர்

பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டிக்கு அருகே மாதேஅள்ளி என்ற ஊரில் இன்று காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டப் பகுதிகளைச் சேர்ந்த 18 கிராம மக்கள் சேர்ந்து காளியம்மன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். பக்தி முழக்கங்களுடன் தேர் நான்கு வீதிகளையும் அழகுற வலம் வந்தது. தேர் நிலையை வந்து சேர்வதற்கு சற்று முன்பு தேரின் அச்சு முறிந்தது.

அதனால் நிலை தடுமாறிய தேர் அப்படியே முன்பக்கமாக கவிழ்ந்தது. இதில் தேரை இழுத்துச் சென்ற பக்தர்கள் பலரும் தேரின் அடியில் சிக்கினர். அவர்களை சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இதில் பாப்பாரப்பட்டி சின்னமாதன் மகன் மனோகரன்(57), பாப்பிநாயக்கன ஹள்ளி கோவிந்தசாமி மகன் சரவணன்(50) ஆகியோர் பலியாயினர். மேலும் மாதேஸ்(45), முருகன்(60), பெருமாள்(53) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு பணிகள்
மீட்பு பணிகள்

கடந்த 2 ஆண்டு காலமாக கரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் தேர் அச்சு முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருவர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in