வெள்ளிக்கிழமையில் இந்த ஸ்லோகம் சொன்னால் கடன் தீரும்; கவலை நீங்கும்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

மகாலட்சுமி
மகாலட்சுமி

வழிபாடுகளும் மந்திரங்களும் நம் பூஜை சடங்குகளில் இரண்டறக் கலந்தவை. ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் சக்தி இருக்கிறது. ஒவ்வொரு வழிபாட்டுக்கும் நற்பலன்கள் இருக்கின்றன.

பூஜையறையில் அமர்ந்துகொண்டு ஸ்லோகம் சொல்லி வழிபடுவது சிறப்பானதுதான் என்றாலும் பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போதும் கூட ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதற்கான பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே

சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே...

எனும் இரண்டு வரி ஸ்லோகத்தை பெண்கள் சொல்லியபடி இருப்பது, எண்ணற்ற நன்மைகளைத் தரும். வெள்ளிக்கிழமை என்றில்லாமல், எல்லாக் கிழமைகளிலும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். மனதுக்குள் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருந்து, மகாலக்ஷ்மியை மனதாரப் பிரார்த்தனை செய்தால், வறுமையும் தரித்திரமும் நீங்கும். அஷ்டலட்சுமியரின் அருளைப் பெறலாம். குறிப்பாக, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, அம்பிகையை வழிபட்டு வந்தால், தோஷத்தின் வீரியம் குறையும். விரைவில் மணமாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை

ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை

சர்வ தாரித்ரிய நிவாரணாயை

ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா...

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வருவது வீடு மனை யோகத்தை உண்டாக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதேபோல், ஐஸ்வர்ய லட்சுமி மந்திரத்தை வெள்ளிக் கிழமைகளில் அவசியம் சொல்லி வருவது, சர்வ பலன்களையும் அள்ளித் தரும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்

ஞானாயை கமலதாரிண்யை

சக்தியை சிம்ஹ வாஹின்யை

பலாயை ஸ்வாஹா !

ஓம் குபேராய நமஹ

ஓம் மகாலட்சுமியை நமஹ...

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைந்திருக்கும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

இந்த ஜென்மத்துக்கான நற்பலன்களையெல்லாம் வழங்கக் கூடியது ‘மகாலக்ஷ்மி அஷ்டகம்’ என்று போற்றுகிறது சாஸ்திரம். தினமும் ஒருமுறை, ஒரேயொரு முறை சொல்லி நமஸ்கரித்து வழிபட்டாலே முன் ஜென்மத்துப் பாவங்களெல்லாம் விலகும் என்பது ஐதீகம்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்கு சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி

ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த் ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸூக்ஷம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே

மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபினிி

பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம்பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகத் ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

மஹாலக்ஷ்ம்யஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர

ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏககாலே படேன் நித்யம் மஹாபாப வினாஸநம்

த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

திரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்

மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா...

என்கிற ஸ்லோகத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். மகாலக்ஷ்மிக்கு உகந்த வெண்மை நிற மலர்களை, வெண் தாமரையைக் கொண்டு அலங்கரித்து, வளர்பிறையின் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மிக்கு பால்பாயசம் நைவேத்தியம் செய்து, பிரார்த்தனை செய்தால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வீட்டில், கவலைச் சத்தமே இருக்காது என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in