வைகுண்ட ஏகாதசியில் கிருஷ்ண நாமம்!

வைகுண்ட ஏகாதசியில் கிருஷ்ண நாமம்!

வைகுண்ட ஏகாதசி நாளில், விரதம் மேற்கொண்டால் மகாபுண்ணியம் என்பார்கள். விரதமே மேற்கொள்ளாமல் இருந்தால் கூட பலன் உண்டு. ஆலயத்துக்குச் செல்ல இயலாதவர்களுக்குக் கூட புண்ணியம் கிடைக்கும்.

’’ஏகாதசி நன்னாளில், விரதம் அனுஷ்டிக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியவில்லை என்றெல்லாம் சிலர் வருந்துவார்கள். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதிலாக

‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே…’

என்று 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

வைகுண்ட ஏகாதசி நன்னாளில், நம்மால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முறை இதைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். காலையில் கொஞ்சம், பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து கொஞ்சம், மதியத்துக்குப் பிறகு கொஞ்சம், மாலையில் கொஞ்சம் என்று முடியும்போதெல்லாம் முடிந்த அளவுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். இதைச் சொல்லச் சொல்ல வைகுண்ட ஏகாதசி எனும் புண்ணிய தினத்தின் பலன்கள் இரட்டிப்பாகி நமக்குக் கிடைக்கும். கிருஷ்ண பரமாத்மாவின் பேரருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி. வைஷ்ணவ திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதிகாலையில் 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறக்கப்படும்.

விரதம் அனுஷ்டிப்பவர்கள், இட்லி முதலான டிபன் சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள். வயதானவர்கள், சிறுவர் சிறுமிகள் திரவ உணவை எடுத்துக்கொள்ள சாஸ்திரம் அனுமதிக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆனால், முழுமையாக உபவாசம் இருப்பவர்கள் எதையும் உண்ணாமல் இருப்பதே சிறப்பு. ஏனென்றால், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என உண்டு. ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. நம்முடைய மனமானது ஒன்று. ஆக, பதினொன்று. ஏகாதசி எனப்படும் பதினோராம் நாளில், 11 விஷயங்களையும் ஐக்கியப்படுத்தி பகவானை நினைப்பதும் துதிப்பதும் தரிசிப்பதும் மிகுந்த பலனைத் தந்தருளக் கூடியவை என்கிறார் நாராயண பட்டாச்சார்யர்.

ஆகவே, ஏகாதசி விரதம் இருந்தால் நம் இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். பரமனின் திருவடியில் நற்கதி பெறலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in