வெள்ளிக்கிழமை ஏகாதசியில் மகாவிஷ்ணு - மகாலட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமை ஏகாதசியில் மகாவிஷ்ணு - மகாலட்சுமி வழிபாடு!

வெள்ளிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்த நன்னாளில், மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வேண்டிக்கொள்வோம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றும் வீட்டில் இருந்தபடி விளக்கேற்றி வழிபாடு செய்தும் பிரார்த்தனை செய்துகொள்வோம். சகல ஐஸ்வர்ய கடாட்சத்தையும் வழங்கி அருளுவார்கள் பெருமாளும் மகாலட்சுமி தாயாரும்!

வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது லக்ஷ்மி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகாலக் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழியைக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி தேவி. அதுவும், வெள்ளிக்கிழமையும் ஏகாதசியும் இணைந்த நன்னாளாக இருந்தால், மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் ஒருசேர தரிசித்துப் பிரார்த்திப்போம்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகம் வாழ்வில் மிக மிக முக்கியம். சுக்கிர யோகம் வேண்டுமெனில் மகாலக்ஷ்மியை வேண்டுவோம். வெள்ளிக்கிழமையில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அல்லது ஏதேனும் இனிப்பைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள்.

மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நன்னாள். பெருமாளை நினைத்து விரதம் மேற்கொள்ளலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பெருமாளை வழிபடலாம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம்.

இன்று ஐப்பசி 18 நவம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை. ஏகாதசியும் கூட! இந்த இரண்டும் இணைந்த நன்னாளில், திருமாலையும் திருமாலின் திருமார்பில் குடிகொண்டிருக்கும் மகாலட்சுமித் தாயாரையும் மனதார வேண்டுவோம்.

உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும். கவலைகள் யாவும் பனியென மறைந்து போகும். மகாலக்ஷ்மி ஸ்துதி சொல்லி வேண்டுவோம். மனதார பிரார்த்தனை செய்வோம். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் லக்ஷ்மிதேவி. சகல காரியங்களையும் இனிதாக்கித் தந்தருளுவார் மகாவிஷ்ணு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in