ரோகிணி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நிதானம் தேவை; வரவு உண்டு; வீண் அலைச்சல்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ரோகிணி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நிதானம் தேவை; வரவு உண்டு; வீண் அலைச்சல்!

ரோகிணி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் பேச்சைக் கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பணவரத்து திருப்திதரும். வீண்பழி ஏற்படலாம்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதல் தரும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் எந்த விமர்சனமும் வைக்காமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளை தட்டிக் கொடுத்து எதையும் செய்யச் சொல்வது நல்லது. உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல் துறையினர், கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆதிபராசக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகளும் எதிர்ப்புகளும் அகலும். மனோதைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in