மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! 2023ல் பணவரவு; துணிவு பிறக்கும்; உதவி கிடைக்கும்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே! 2023ல் பணவரவு; துணிவு பிறக்கும்; உதவி கிடைக்கும்!

மிருகசீரிஷம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி சாதகமான பலன்களைத் தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகமெடுக்கும். கண்மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்துச் செயல்படுவது நல்லது. எந்தவொரு விஷயத்தையும் தக்க ஆலோசனையுடன் செய்வது நன்மையைத் தரும்.

தொழில் மற்றும் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நிதி பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் பழகும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல் சந்தோஷத்தைத் தரும். பயணங்கள் செல்லும்போது கவனம் தேவை. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்கள், எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சினைகளைக் கண்டால் ஒதுங்கிச் செல்வது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நன்மைகளைத் தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

மாணவர்கள், கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டுப் படிப்பீர்கள்.

பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in