கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிலும் கவனம் தேவை; திடீர் செலவு; வேலையில் உஷார்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிலும் கவனம் தேவை; திடீர் செலவு; வேலையில் உஷார்!

கிருத்திகை நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியைத் தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபச்செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.

குடும்பத்தில் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றைக் கையாளும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in