அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! 2023ல் மனை வாங்கும் யோகம்; ஆடம்பரச் செலவு வேண்டாம்; வேலையில் நன்மை!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அஸ்வினி நட்சத்திர அன்பர்களே! 2023ல் மனை வாங்கும் யோகம்; ஆடம்பரச் செலவு வேண்டாம்; வேலையில் நன்மை!

அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருப்பதாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதாலும் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நலம் தரும்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மைகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதிதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாகப் பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அரசியல் துறையினர், திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.

மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமாரியம்மனை ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வணங்கி வரக் கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in