அமாவாசையில் பசுவுக்கு அகத்திக்கீரை; முன் ஜென்ம பாவமெல்லாம் தீரும்!

அமாவாசையில் பசுவுக்கு அகத்திக்கீரை; முன் ஜென்ம பாவமெல்லாம் தீரும்!

அமாவாசையில் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் நம் பாவமெல்லாம் தீரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை என்பது வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாளாகப் போற்றப்படுகிறது. இந்த பூரணமான நாளில், முன்னோர்களை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிற சாஸ்திரம், தெய்வ வழிபாட்டையும் மறக்காமல் செய்யச் சொல்கிறது. முக்கியமாக, பிற உயிர்களுக்கு உதவச் சொல்லி வலியுறுத்துகிறது தர்மசாஸ்திரம்.

’எல்லாப் பசுக்களையும் காமதேனுவாகவே பார்க்கிறேன். உன்னை வணங்குவதால், காமதேனுப் பசுவானவள் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சகல நன்மைகளையும் தந்தருளும்படி சொல்வாயாக’ என்கிறது மந்திரம்.

பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ரொம்பவே விசேஷமானது. எந்தநாளில் வேண்டுமானாலும் அகத்திக்கீரை வழங்கி வழிபடலாம். குறிப்பாக, அமாவாசை நாளில், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது, முன்னோர் சாபத்தை நீக்கும் என்றும் முன்னோர் ஆசி கிடைக்கப் பெறலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், முன் ஜென்மத்து வினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். பசுவை வணங்குவதும் பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதும் மகா புண்ணியம். பசுவுக்கு அகத்திக்கீரையை வழங்கும்போது, நாம் மனதார என்ன நினைத்துப் பிரார்த்தனை செய்கிறோமோ அவை அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பசுவுக்கு அடிக்கடி அகத்திக்கீரை வழங்குங்கள். அமாவாசை நாளிலேனும் வழங்குங்கள். நம் முன் ஜென்மத்துப் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in