அருளும் பொருளும் தரும் ஆதித்ய ஹ்ருதயம்!

அருளும் பொருளும் தரும் ஆதித்ய ஹ்ருதயம்!

விடியலைத் தருவார் சூரிய பகவான்

இன்பமும் துன்பமும் கலந்துதானே வாழ்க்கை. துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கும் வேளையில், ‘நம் வாழ்வில் விடியல் எப்போது?’ என்று கேட்டுக்கொள்ளாதவர்களே இல்லை. கிழக்கில் சூரியன் உதிக்கும் அற்புதமான காலைப் பொழுதில், தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்துவந்தால், ஈடு இணையற்ற பலன்களைப் பெறலாம் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

"நம்முடைய இக்கட்டான காலத்திலும், ராவணன் போன்ற பெரிய எதிரியே வந்தாலும் கவலைப்படாதீர்கள். எதிரிகளின் தொல்லையை அனுபவிக்கிற நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு சக்தியைக் கொடுத்து அருளுபவன் சூரிய பகவான். ஆதித்ய ஹ்ருதயம் பாடினால் உங்களின் ஆபத்துக்கள் நீங்கும். கஷ்ட காலங்களை வெகு அழகாக வெல்லலாம். மனதில் தோன்றும் தேவையற்ற பயமும் குழப்பமும் நீங்கும். மனம் புத்துணர்ச்சி பெறும். எதிர்ப்புகளை வெல்லும் திறனைத் தந்தருளுவார் சூரிய பகவான்.

தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யலாம். அல்லது ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். அதேபோல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாராயணம் செய்வது விசேஷம். கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அவசியம் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும்.

ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி:

ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்


ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்

ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:

மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி:

பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர:


ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஆதித்ய ஹ்ருதயத்தின் இந்த பத்து ஸ்லோகங்களை முதலில் சொல்லிவாருங்கள். பிறகு இதை மனனம் செய்துகொள்ளுங்கள்.அடுத்து,

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன:

வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கல: ஸர்வதாபன:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ரக்ரஹதாராணா மதிபோ விச்வபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மந் நமோஸ்துதே

நம: பூர்வாய கிரயே பச்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர்கணானாம் பதயே தினாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:


ப்ரஹ்மேசானாச்யுதேசாய ஸூர்யாயாதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:


தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயாமிதாத்மனே
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகராபாய வஹ்னயே விச்வகர்மணே
நமஸ்தமோ பிநிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

- என்று இருபது ஸ்லோகங்கள் வரை சொல்லி வாருங்கள். அல்லது ஆதித்ய ஹ்ருதயம் புத்தகம் வைத்துக்கொண்டு, பார்த்தபடியும் பாராயணம் செய்யலாம்.


நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஷ்டித
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னிஹோ த்ரிணாம்

வேதாச்ச க்ரதவைச்சைவ க்ரதூனாம் பலமேவ ச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏனமாபத்ஸு க்ருச்ச்ரேஷு காந்தாரேஷு பயேஷுச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவஸீததி ராகவ:

பூஜயஸ்வை நமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி


அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்


ஏதச் ச்ருத்வா மஹாதேஜா நஷ்டசோகோ பவத்ததா
தாரயாமாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசிர் பூத்வா தனுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத்

அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி

அடுத்துள்ள இருபது முதல் முப்பது வரையிலான ஸ்லோகங்கள் இவை. ஞாயிற்றுக்கிழமைகளில், காலையில் சூரியோதயத்தின்போது, குளித்துவிட்டு, கிழக்கு திசை பார்த்தபடி, அமர்ந்துகொண்டு, ஒரே மூச்சில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி தவறாமல் வேண்டிக்கொள்ளுங்கள். சூரிய தோஷமும் பாவமும் இல்லாமல் போகும். வாழ்வில் விடியலைத் தருவார் சூரிய பகவான் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in