நிழற்சாலை

நிழற்சாலை

காலக் கிணறு

அடித்த பிளாஸ்டிக் பந்து

புதரில் விழுந்ததென்று

அதற்குள்ளாகவே

தேடிய எங்களுக்கு

நீச்சல் பழகக் காரணமாயிருந்த

கிணற்றின் மீது

எந்தச் சந்தேகமும் எழவில்லை

படிக்கட்டின்கீழ் பந்து மிதப்பதைப் பார்க்கும்வரை

மூன்றாம் வகுப்பு மணிக்கும்

ஐந்தாம் வகுப்பு சபரிக்கும் நடந்த சண்டையில்

எல்லோரும் சேர்ந்து வாங்கிவைத்த

பிளாஸ்டிக் மட்டையை

சபரி இந்தக் கிணற்றில்தான் தூக்கி எறிந்தான்

நான் வீட்டில் தங்குவதில்லையென

மாங்காய்களை

பம்பரங்களை

கோலிகளை ஏற்றி வலம்வந்த

என் புல்லட் டயரை

அப்பா இதற்குள்தான் வீசி எறிந்தார்

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு

இப்போது கிணறு நிரம்பியிருக்கிறது

மிதக்கின்றன என் பால்யங்கள்!

- ச.ஜெய்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in