உடலுக்குள் ஒரு ராணுவம் -23: சளியை விரட்டும் பேராயுதம்!

உடலுக்குள் ஒரு ராணுவம் -23: சளியை விரட்டும் பேராயுதம்!

நாம் அன்டார்க்டிகாவில் வாழ்வதாக இருந்தால், நாம் சுவாசிக்கும் காற்று பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை. அங்கு காற்று அத்தனை சுத்தம். ஆனால், நாம் வாழ்வதோ அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அசுத்தக் காற்றுக்கு மத்தியில்! அந்த அசுத்தக் காற்று நம் ‘இரட்டையர்கள்’ நுரையீரல்களுக்கு எதிரி என்பது உங்களுக்குத் தெரியும்தானே!

சரி, நல்ல காற்று வாங்குவதற்காகக் கடற்கரைக்குப் போனாலும் அங்கேயும் நம் சுவாசத்துக்கு ஆபத்து காத்திருக்கிறது என்கிறார்கள். என்ன காரணம்? கடற்கரைக் காற்றில் ஈரம் அதிகமென்றால், அலர்ஜி ஆகும். காளான் உள்ளிட்ட காரணிகள் அதில் அதிகம் கலந்திருக்குமாம், நுரையீரல் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அப்படியானால், நாம் ஒரு நாளைக்கு உத்தேசமாக 20 ஆயிரம் முறை மூச்சுவிடுகிறோம். அப்போதெல்லாம் 10 லட்சம் கிருமிகள் வரை நம் மூச்சுக் காற்றில் கலந்து உடலுக்குள் ‘விசிட்’ செய்கின்றன. கிருமிகள் மட்டுமா? புகை நச்சுக்கள், ரசாயனங்கள் என இன்னும் பல எதிரிகள் அதில் இருக்கின்றனர். அந்த எதிரிகளை எப்படித்தான் சமாளிக்கின்றன, நம் நுரையீரல்கள்?

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in