சமயம் வளர்த்த சான்றோர் 20: சுந்தரமூர்த்தி நாயனார் 

சமயம் வளர்த்த சான்றோர் 20: சுந்தரமூர்த்தி நாயனார் 

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாகிய சிவபெருமான் மீது, இடையறாத அன்பு வைத்த அடியார் பெருமக்களுள் மிக முக்கியமானவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

தென்னாடு முழுவதும் சைவமணம் கமழச் செய்தார். அடியார்க்கு இன்னமுது அளித்ததன் மூலம் விருந்தோம்பல் பண்பும், அவரது ஈகைத்தன்மையும், கோயில்கள்தோறும் சென்று ஈசனைப் பாடியதால் அவரது பக்தியும் அறியப்படுகின்றன. திருநீற்றின் மகிமையை உலகறியச் செய்தவர். சைவ சமயத்தில் சக மார்க்கத்தை கடைபிடித்தார்.  

கிபி எட்டாம் நூற்றாண்டில், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் ஆதிசைவர் குலத்தில் சடையனார் – இசைஞானி தம்பதிக்கு மகனாக அவதரித்தார் சுந்தரர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர். சிவனை முப்போதும் திருமேனி தீண்டி சிவாகம முறைப்படி வழிபாடு செய்யும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரால் வளர்க்கப்பட்டார் சுந்தரர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in