மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 11

மகா பெரியவா
மகா பெரியவா ஓவியம்: A.P.ஸ்ரீதர்

‘‘தி ருமணங்கள், உபநயனங்கள் (பூணூல் அணிவிப்பது) போன்றவற்றை ஆடம்பரமாக நடத்தக் கூடாது. இதை நடத்துபவர்களும் கலந்து கொள்பவர்களும் சடங்குகளுக்கும் மந்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்று தன் உபன்யாசங்களில் மகா பெரியவா அடிக்கடி வலியுறுத்துவார் .

மகானின் திருவாக்குக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக எளிமையாக இல்லத்து விழாக்களை நடத்தியவர்களும் உண்டு. அதே சமயம் தங்கள் செல்வச் செழிப்பையும் பகட்டையும் காண்பிக்க வேண்டும் என்று ஆடம்பரமாக நடத்தியவர்களும் உண்டு.

ஒரு உபநயனம் வெகு எளிமையாக நடப்பதற்கு காஞ்சி மகான் எந்த அளவுக்கு உதவி இருக்கிறார்... தானே முன்னின்று அதை நடத்தியும் இருக்கிறார் என்பதை இங்கே பார்க்கலாம்.

அன்றைய தினம் காஞ்சி மகான் ஓரிக்கையின் பாலாற்றங்கரையில்  முகாமிட்டிருந்தார்.

பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடும் பாலாற்றங்கரையில் தன் கைங்கர்யதாரர்களுடனும் சிப்பந்திகளுடனும் அடிக்கடி முகாமிட்டு விடுவார் பெரியவா.

நதி நீரின் பரவச ஓட்டமும், வயல்களில் விளைந்திருக்கிற பயிர்களின் சலசலப்பும், வெள்ளந்தியாகத் தெரிகிற கிராமவாசிகளின் முக பாவனையும் மகா பெரியவாளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

இயற்கையை நேசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் எல்லோரையும் சமமாக பாவிக்கத் தெரியும்.

மகானின் இத்தகைய மன ஓட்டம் தெரிந்த அவரது அத்யந்த பக்தர்கள் பலர், பாலாற்றங்கரையில் முகாமிட்டிருக்கிற வேளையில் ஆசையுடன் தேடி வருவார்கள். தரிசித்து இன்புறுவார்கள்.

அன்றைய தினம் மகா பெரியவா விச்ராந்தியாக, பரமேஸ்வர சொரூபமாகக் காணப்பட்டார்.

அப்போது அந்தப் பக்கமாகக் கடந்து சென்ற சிறுவன் ஒருவன், மகா பெரியவாளைப் பார்த்ததும் அவர் எதிரே பவ்யமாக நின்றான். நமஸ்கரித்தான்.

அந்தச் சிறுவனின் பெயர் சுந்தரராமன்.

இவனது தகப்பனார், காஞ்சி மடத்து சேவையில் தன்னை ஈடுபடுத்

திக் கொண்டிருப்பவர். மகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர்.

சுந்தரராமனுக்கு ஆசி வழங்கிய பெரியவா, ‘‘ஒனக்கு இன்னும் உபநயனம் (பூணூல் அணிவிப்பது) ஆகலியோ?’’ என்று கேட்டார்.

வேஷ்டியும், இடுப்பில் துண்டைச் சுற்றிக் கட்டியிருந்த அவன் மேலுடம்பில் பூணூல் காணப்படவில்லை. இதைப் பார்த்துவிட்டுத்தான் பெரியவா கேட்டிருக்கிறார்.

‘‘இன்னும் இல்லே பெரியவா...’’

‘‘ஏன் போடலை?’’ இது பெரியவா.

‘‘கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் போட்டுக்கலாம்னு அப்பா சொல்லிட்டார்.’’

‘‘சரியாப் போச்சு... பூணூல் போட்டுக்க பணம் காசு எதுக்கு வேணும்? வைதீகாள் வேணும். பூணூல் போட்டுக்கற பையனோட அப்பா, அம்மா வேணும். இது போதாதா?’’ பெரியவாளின் கேள்விக்கு விடை சொல்லும் வயது சுந்தரராமனுக்கு இல்லை. எனவே, அமைதி காத்தான்.

மகா பெரியவா தொடர்ந்தார்.. ‘‘இப்ப இருக்கறவா எல்லாம் இப்படித்

தான் இருக்கா. இவா போற போக்கு எனக்குப் பிடிக்கலை. சாதாரண உபநயனத்தைக்கூடவா சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி நடத்தணும்?

இதுக்கு எதுக்கு ஆடம்பரம்? விழா, விருந்தெல்லாம் தேவையா? என்கிட்ட

வேலை செய்யறவனோட பையன் எனக்கு முன்னால வெத்துடம்போட (பூணூல் இல்லாமல்) நிக்கறது பாக்கறதுக்கே நன்னால்ல... போயி  உன் அப்பாவைக் கூட்டிண்டு வா. இங்கதான் எங்கேயாவது இருப்பான். அப்படியே வர்றப்ப ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வரச் சொல்.’’

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் சுந்தரராமனும், அவரது தந்தையும் அங்கே ஆஜர். கையில் பஞ்சாங்கம்.

இருவரும் மகானுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

பஞ்சாங்கத்தைக் கேட்டு வாங்கினார் மகா பெரியவா. அதைப் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல நாள் குறித்தார்.

‘‘அடுத்த வியாழக்கிழமை நன்னா இருக்கு. அன்னிக்கு ஒன் பையனுக்கு மடத்துல பூணூல் போட்டுடலாம்.’’

இதைக் கேட்ட சுந்தரராமனின் தகப்பனார் ஒன்றும் சொல்

லத் தோன்றாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

பிறகு மெல்ல, ‘‘இல்லே பெரியவா... கையில கொஞ்சம்

காசு சேர்ந்த பிறகு சொந்த பந்தங்களுக்கு எல்லாம் தகவல் தெரிவிச்சு நடத்தலாம்னு இருந்தேன்’’ என்றார்.

மகா பெரியவா சற்று கோபத்துடன் ஆரம்பித்தார்: ‘‘இந்த ஃபங்ஷனுக்கு நீ ஊரைக் கூட்ட வேண்டாம். பையன் இங்கேயேதான் இருக்கான். பையனோட அப்பாம்மா நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கேள். உபநயனம் பண்ணி வைக்கிறதுக்கு மடத்துல சாஸ்திரிகள் இருக்கா. ஒரு உபநயனம் நடத்தி வைக்கிறதுக்கு இதைவிட வேற என்ன வேணும்?’’

நீளமாகக் கேட்டு முடித்த பிறகு சுந்தரராமனின் தந்தையால் ஒன்றும் பேச முடியவில்லை. வலக்கையால் வாயைப் பொத்தியபடி பெரியவா பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு மாமுனிவர் ஆரம்பித்தார்: ‘‘ரொம்ப ரொம்ப முக்கியமான சம்ஸ்காரங்

களைக்கூட எல்லாரும் இன்னிக்கு ஆடம்பரமா பண்ண ஆரம்பிச்சுட்டா. பட்டுப் புடவைகள், தடபுடலான விருந்து,

ஆர்ப்பாட்டத்துக்குக் கன்னாபின்னானு செலவு என்று

பணத்தை வாரி இறைச்சுப் பண்றா. கையில காசு இருக்கிற

பணக்காரா வேணா இப்படித் தாம்தூம்னு பண்ணலாம். ஆனால், அதைப் பாத்துட்டு ஏழையாகப்பட்டவாளும் கடனை உடனை வாங்கி இது போல் செய்ய ஆரம்பிச்சுட்டா. இதுதான் என் மனசை சங்கடப்படுத்தறது.’’

ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தார் சுந்தரராமனின் தகப்பனார்.

‘‘உபநயனத்துக்கு ஏன் ஆயிரமாயிரம் ரூவா செலவு பண்ணணும்? ரொம்ப சொல்பமான தொகை இருந்தாலே போதும்... பிரமாதமா முடிச்சிடலாம்.

இன்னிக்குப் பல பேர், கல்யாணத்துக்கு மொத நாள் அன்னிக்குத்தான் கல்யாணப் பையனுக்குப் பூணூலை மாட்டி விடறா. நீ அது மாதிரி இருக்கக் கூடாது. இந்தப் பையன் வேற என் கண் முன்னால நடமாடிண்டு இருக்கான். இதுநாள் வரை இவனை நான் எப்படிக் கவனிக்காமல் போனேன்னும் தெரியல.’’

சுந்தரராமனின் பூணூல் வைபவம் தாமதம் ஆவதற்கு, இந்தப் பரப்பிரம்மம் தன்னைத் தானே காரணம் சொல்லிக் கொண்டது.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்தவர் சுந்தரராமனின் தகப்ப

னார்! ஒரு தந்தைக்கு இருக்க வேண்டிய கரிசனத்தோடு மகா பெரியவா எத்தனை ஆதூரத்துடன் பேசுகிறார்!

காஞ்சி மகானுக்கு சாஷ்டாங்கமாக சுந்தரராமனும், அவனது தகப்பனாரும் நமஸ்காரம் செய்தார்கள். இருவரது விழிகளும் கண்ணீரால் நிரம்பின.

‘‘அடுத்த வியாழக்கிழமை அன்னிக்கு உபநயனம். ‘பணம்

இல்லே... பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லே’னு இனிமே காரணம் ஏதும் சொல்லிண்டிருக்காதே. மடத்து சாஸ்திரிகளுக்கு உன் சக்திக்கு ஏற்றவாறு என்ன சம்பாவணை கொடுத்தாலும் வாங்கிப்பார். மடத்து உக்ராணத்துல தேவையான மளிகை சாமான்கள் இருக்கு. நீ, பையன், உன்னோட பார்யாள் (மனைவி)... அவ்ளோதான். வேற யாரும் இதுக்கு அவசியம் இல்லை.’’

சுந்தரராமனின் தகப்பனார் திடீரென்று நினைவுக்கு வந்

தவராக, ‘‘பெரியவா... அடுத்த வியாழன் அன்னிக்கு சந்திர

மௌலீஸ்வரர் பூஜைக்கு நிவேதனம் தயார் செய்ய வேண்

டிய கைங்கர்யம் எனக்கு இருக்கே..? அன்னிக்கு உபநயனம்

எப்படி வெச்சுக்க முடியும்?’’ என்று பவ்யமாகக் கேட்டார்.

‘‘ஒண்ணும் கவலைப்படாத... அன்னிக்கு பூஜைக்கு நிவேத்திய கைங்கர்யமும் செய்யப் போகிறாய்... உன் பையன் சுந்தரராமனுக்கு உபநயனமும் செய்து வைக்கப் போகிறாய்’’ என்றார் மகா பெரியவா திடமாக.

‘‘சரி பெரியவா...’’ என்றார் சுந்தரராமனின் தந்தையார்.

ஒரே நேரத்தில் இரண்டு கார்யங்களை எப்படிச் செய்வது?

மகா பெரியவாளே அதை சுந்தரராமனின் தகப்பனாருக்குக் கச்சிதமாக விளக்கினார்.

‘‘ஒன் பையனோட உபநயனம் மடத்துல கோசாலைல நடக்கணும். பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் வந்துடக் கூடாது. அது ரொம்ப முக்கியம். எப்படி சந்திரமௌலீஸ்வரருக்கும் நிவேதனம் பண்ணிண்டு, பையனோட உபநயனத்துலயும் கலந்துக்கறதுன்னு குழம்பாதே... சொல்றேன், கேளு...

உபநயனத்துக்கு உண்டான பூர்வாங்க வேலைகளை விடியகார்த்தாலயே ஆரம்பிச்சுடு. இது ஓரளவு தயார் பண்ணி வெச்சதும், சந்திரமௌலீஸ்வரருக்கு நிவேதனம் தயார் பண்ணப் போயிடு. நான் சந்திரமௌலீஸ்வரர் பூஜையை ஆரம்பிக்கிற சமயத்துல, உபநயனம் நடக்கிற இடத்துக்கு வந்து அங்கே நடக்கிற வைதீக கர்மாக்களில் கலந்துக்கோ. சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம்

நடக்கின்ற வேளையில ஒன் பையனுக்கு உபநயன முகூர்த்தம் நடக்கணும். எல்லாம் சரியா நடக்கும்.’’

இதுபோல் ஒரு மகானை இனி இந்த பூலோகம் பார்க்குமா?

அந்தந்தக்  கர்மாக்களை உரிய  காலத்தில்  நடத்த  வேண்டும்.

ஆடம்பரம், படாடோபம் கூடாது...

இத்தனை நாளில் இவனை எப்படிக் கவனிக்காமல் விட்டு விட்டேன்? (சுந்தரராமனுக்கு இதுவரை பூணூல் போடாததைத் தன் குறையாகக் கருதுகிறார்).

ஒரே சமயத்துல ரெண்டு கார்யத்தையும் நீ பண்ணு (உனக்கு சந்திரமௌலீஸ்வரர் நிவேதனமும் முக்கியம். உன் பையன் உபநயனமும் முக்கியம்).

தன்னை அண்டிய ஒரு குடும்பத்தை அரவணைத்துக் காக்கிறாரே இந்த ஆபத்பாந்தவன்? இதுபோல் எத்தனை பேரின் குடும்பத்தைத் தன் குடும்பமாக எண்ணிக் கட்டிக் காத்து வருகிறார் இந்த மகான்?

சுந்தரராமனின் உபநயன வைபவத்தைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(ஆனந்தம் தொடரும்)

முந்தைய அத்தியாயத்தை வாசிக்க:

மகா பெரியவா
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 10

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in