சைஸ் ஜீரோ 25: சமரசம் அல்ல சாமர்த்தியமே தேவை!

சைஸ் ஜீரோ 25: சமரசம் அல்ல சாமர்த்தியமே தேவை!

நீங்கள் மேற்கொள்ளும் டயட் எப்போது முழுமை பெறும் தெரியுமா? நீங்கள் உண்ணும் உணவு ஊட்டச்சத்தானதாகவும், உடலுக்கான பயிற்சி சீரானதாகவும், உறக்கம் குறைபாடில்லாமலும், உறவுகள் உங்களுக்கு கடிவாளமாக அல்லாமல் பக்கபலமாக இருக்கும்போதும்தான் முழுமை பெறும்.

டயட்டுடன் இணைந்த மூன்று அம்சங்களை முந்தைய அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்த நாம், உறவுகளைப் பேணுவதில் பெண்கள் எத்தகைய மன முதிர்ச்சியைக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளின் தொடர்ச்சியை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்தல் பெரும்பாலும் பெண்களின் கடமையாகவே பார்க்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே சமரசம் செய்துகொள்ள பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள். ஆண் குழந்தைக்கு பலகாரமும் பெண் பிள்ளைக்கு பழைய சோறும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வி, வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேறி வரும் இந்தக் காலகட்டத்தில் இந்த பேதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. சமத்துவம் கோரும் பெண்களின் கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. இவை எல்லாம் நிச்சயமாக வரவேற்கத்தக்கது.

ஆனால் சமத்துவம் என்பது வீட்டில் இருந்துதான் நிலைநாட்டப்பட வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி நல்ல வேலையிலும் தன்னை அமர்த்திக்கொள்ளும் பெண்கள்கூட உணவு, உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் உறவுகளிடம் சமரசம் செய்து கொள்கின்றனர் என்பது வேதனையான ஒன்று.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in