எங்க குலசாமி 2: இந்த வாரம்  சுப்புலட்சுமி ஜெகதீசன்

எங்க குலசாமி 2: இந்த வாரம் சுப்புலட்சுமி ஜெகதீசன்

காளமங்கலம் குலவிளக்கம்மன்

கா.சு.வேலாயுதன்

திமுகவில் இருந்தாலும் அவ்வப்போது தி.க மேடைகளில் பங்கேற்று கடவுள் மறுப்பு கொள்கையை ஆணித்தரமாகப் பேசிவருபவர்  முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவரிடம்,  “உங்க குலசாமி கோயில் வழிபாடு குறித்துப் பேசமுடியுமா?” என சற்றே தயக்கத்துடன் கேட்டேன்.  “இதிலென்ன தயக்கம். குலதெய்வ கோயிலுக்கு மட்டும்தான் நான் போவேன். ஏன்னா, அங்க இருக்கிறது எம் முன்னோர்கள். அவங்கள கும்புடுறதுல என்ன தயக்கம்? எங்க குல தெய்வக் கோயில் திருப்பணிகளைச் செய்ததே நாங்கள்தான்” என்று வெளிப்படையாகப் பேசினார். 
தொடர்ந்து பேசிய அவரது கணவர் ஜெகதீசன்,  “அக்கா வேலைய முடிச்சு வரட்டும். அதுக்குள்ள நம்ம கோயிலை சுத்திப்பார்க்கலாம் வாங்க!” என்று என்னை அவர்களது குலதெய்வக் கோயிலுக்கு அழைத்தார். 

போகும் வழியில் தங்களது குலக்கோயிலின் பூர்வீகத்தை விவரித்தார். “கொங்கு வேளாளர் குடிமக்களில் சுமார் 116 குலங்கள் இருக்கு. எங்களுடையது கண்ணகுலம்.  ‘கொங்குமண்ணில் ஒரு கல்லைத் தோண்டினால் ஒரு கண்ணகுலத்தான் இருப்பான்’ என்பது வழக்கு மொழி. எங்களுக்கான குலதெய்வம் காளமங்கலம் குலவிளக்கம்மன். காளமங்கலம் கிராமப் பஞ்சாயத்தைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பூர்வீகமாகக் கொண்ட எங்க குலத்து மக்கள் எல்லாருக்குமே குலவிளக்கம்மன்தான் குலதெய்வம்.  எங்க மூதாதையர்கள் ஆயிரம் வருசத்துக்கு முந்தியே இந்தக் கோயிலை உருவாக்கி இருக்காங்க. இதை தொல்லியல் அறிஞர்களே சொல்றாங்க. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in