கரு.முத்து.வாழைப்பூ உருண்டைக் குழம்பும்... பனிவரகு அல்வாவும்..!.கவியரங்கம், பட்டிமன்றம் என்று ஓடிக்கொண்டே இருப்பவர் கவிஞர் நந்தலாலா. என்னதான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடினாலும் நல்ல சாப்பாட்டைத் தேடிப் பிடிக்கவும் சலிப்பதில்லை. நல்ல சாப்பாட்டுக் கடைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து உண்கிறார். நந்தலாலாவின் சொற்திறமும் நயமும் நாடறிந்தது. இனிய தமிழ் சொற்கள் பிறப்பதற்கு அவரின் சுவையரும்புகளின் உணர்திறனும் ஒருகாரணம் என்பதை அவரைச் சந்தித்த சமயத்தில் உணர்ந்துகொள்ள முடிந்தது.. “சாப்பாட்டுல வெரைட்டியா சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். என் மனைவி நல்லா சமைப்பாங்க. பொதுவா, சமைக்கும்போது அதுல சாப்பிடறவங்களோட முகம் தெரியணும். அப்பதான் அதுல கூடுதல் ருசியிருக்கும். அதேபோல, சாப்பிட்டு முடிச்சவுடனே அத பாராட்டி நாலு நல்லவார்த்தை சொல்லணும். அப்பதான் சமைச்சவங்க முகம் மலரும். அதுக்கப்புறம் சாப்பாடும், வாழ்க்கையும் இன்னும் கூடுதலா மணக்கும்.