அரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்

அரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்

அப்சல் ஜாவித் தன் சீரற்ற பல்வரிசையைக் காட்டி மஹிமாவைப் பார்த்துச் சிரித்தான்.

“இப்போ நடந்துட்டிருக்கிற எல்லாச் சம்பவங்களும் உனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதெல்லாம் இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்தான். நாளையிலிருந்து நாம் எல்லோரும் நார்மலாயிடுவோம். உன் மூளையோட ஒட்டுமொத்தச் செயல்பாடும் இனிமேல் என்னுடைய ‘ஹை ஸ்கை’ டெக்னாலஜி பீப்பிள்ஸுக்கு மட்டுமே சொந்தம். ‘அல் அராபத்’துக்காக உருவாக்கப்பட்ட அந்த ‘அரேபிய ரோஜா’ என்னோட சிலிக்கான் தோட்டத்தில்தான் பூக்கணும்!’’

அண்ணன் அப்சல் ஜாவித் பேசி முடிக்கும்வரை மவுனம் காத்த ஹயாத், உதட்டிடுக்கில் தொங்கிக்கொண்டிருந்த சிகரெட் பைப்போடு மஹிமாவை நெருங்கினான்.

“இன்னும் ஒரு மாச காலத்துக்கு நீ இந்த வீட்டில்தான் இருந்தாகணும். வேற வழியில்லை. இது ஒரு அறிவுத் திருட்டு. எங்களுக்கு நீ வேணும். உன்கிட்ட இருக்கிற அந்த ரிஸரக்ஷன் டெக்னாலஜி வேணும். எங்களுக்கு நீ ஒத்துழைப்பு தராதபட்சத்தில் கனடாவில் இருக்கிற உன்னோட உட் பி சகாதேவ் உயிரோடு இருக்க மாட்டான். அவன் மட்டுமில்லை, உன்னோட அம்மா, அப்பா ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் உயிரோடு இருப்பாங்க!’’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in