"மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்'' என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாக திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்திலிருந்து அவர்கள் சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 16 மெட்ரோ இயில் நிலையங்களில் ரேபிடோ பைக், உபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி, ஸ்மார்ட் பைக் வசதிகள் உள்ளன.
12 மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைப்பு பேருந்துகள், 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதிகள், எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே பயணச்சீட்டை இந்த மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களிளும் பெரும் வசதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வரும்.
இதைதவிர சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஐ.டி மற்றும் தனியார் பெறு நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கு அந்தந்த நிறுவனங்களே மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பு பேருந்து வசதிகான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பயணிகளின் எண்ணிக்கை 1.13 லட்சமாக இருந்தது. இம்மாதம் 18-ம் தேதி வரை பயணிகளின் எண்ணிக்கை 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ இயில் நிறுவனம் செய்து வருவதை ஒட்டி பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.