`முள்வேலி அமைக்காதீங்க; வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்'

வனத்துறையினரின் முள்வேலியை அகற்ற அதிமுக வலியுறுத்தல்
`முள்வேலி அமைக்காதீங்க; வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்'
ஆட்சியர் அரவிந்திடம் மனு அளித்த அதிமுகவினர்

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் வனத்துறையினர் முள்வேலி அமைப்பதைக் கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே போடப்பட்டுள்ள முள்வேலியை அகற்ற வேண்டும் எனவும் அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம் சென்னையில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் இருப்பதால் இதுதொடர்பான அவரது கோரிக்கை கடிதத்தை தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பொன் சுந்தர் நாத், மகாராஜ பிள்ளை உள்ளிட்ட அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் கொடுத்தனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ``கீரிப்பாறை அருகே தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள வனச் சோதனை சாவடியை அடுத்து அதன் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள இடங்களில் வனத்துறை திடீரென தங்களுக்குச் சொந்தமானது என முள்வேலி அமைத்துக் கொண்டிருக்கிறது. இது அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டே இந்தப் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் முள்வேலி அமைக்கப்படுவது முற்றிலும் தவறானது. இதில் பொதுமக்களுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை வனத்துறை நிறைவேற்றிட வேண்டும். இப்போது முள்வேலி இடும் பகுதியில் இருக்கும் மைதானத்தை தான் அப்பகுதியில் இருக்கும் இளைஞர்களும், விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் முள்வேலி அமைப்பதை வனத்துறை கைவிட வேண்டும்’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in