தந்தத்தால் குத்தி காலால் மிதித்தது: காட்டு யானையால் ஜல்லிக்கட்டுக் காளைக்கு நடந்த சோகம்!

தந்தத்தால் குத்தி காலால் மிதித்தது: காட்டு யானையால்  ஜல்லிக்கட்டுக் காளைக்கு நடந்த சோகம்!

ஊருக்குள் புகுந்த ஒற்றைக்காட்டு யானை, ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தி, காலால் மிதித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பிதிரெட்டி ஊராட்சியில் பூனப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நாகராஜன் ஜல்லிக்கட்டுக் காளை வளர்த்து வந்தார்.

அந்த காளை வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென காட்டுக்குள் இருந்த வந்த ஒற்றைக்காட்டு யானை ஜல்லிக்கட்டுக் காளையை தந்தத்தால் குத்தியது. அத்துடன் காலால் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜல்லிக்கட்டுக் காளை உயிரிழந்தது. இதன் பின் காட்டு யானை அங்கிருந்து சென்று விட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நாகராஜன் உள்ளிட்ட கிராமமக்கள், உயிரிழந்த ஜல்லிக்கட்டுக் காளைக்கு அஞ்சலி செய்து நல்லடக்கம் செய்தனர். ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றைக்காட்டு யானைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூனப்பள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in