`தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?'- தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

`தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது?'- தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நாமக்கல்லில் உள்ள எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 9-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு ஆங்கிலம் பொதுத்தேர்வின் போது, மாநில அளவில் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலர் நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த போது, காலை 9.30 மணிக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் உதவியாளர் பள்ளி வளாகத்தில் இருந்துள்ளனர். ஏற்கெனவே முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களுக்கான தேர்வு தொடர்பான அறிவுரை கூட்டத்தில், தேர்வு நாளான்று பள்ளி வளாகத்தில் அந்தப் பள்ளியை சேர்ந்த யாரும் இருக்கக்கூடாது என கூறப்பட்டது. தேர்வு விதிமுறையை மீறி அந்தப் பள்ளியின் முதல்வர் மற்றும் 2 உதவியாளர்கள் உள்ளே அனுமதித்தது குறித்து முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ராஜன் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

இதனிடையே, பொதுத்தேர்வு விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தால் தேர்வு மையத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என தனியார் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் உதவியாளர் கூறும்போது, தேர்வு விதிகளை மீறி பள்ளியில் இருந்ததற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் தரப்பில் இருந்து விளக்கம் இன்று வரையில் அளிக்கப்படவில்லை என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in