தாழக்குடி - சந்தைவிளை பாலப்பணி எப்போது?

தாழக்குடி - சந்தைவிளை பாலப்பணி எப்போது?
தளவாய் சுந்தரம்

தாழக்குடி - சந்தைவிளை இடையேயான பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், கோடைகாலத்தைப் பயன்படுத்தி இப்போதே இந்த பாலப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பகுதியை உள்ளடக்கிய கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தளவாய் சுந்தரம் ‘காமதேனு’ இணையதளத்திடம் கூறுகையில், ’’தாழக்குடி கிராமத்தில் இருந்து சந்தைவிளை செல்பவதற்கு இணைப்புப் பாலம் ஒன்று இருந்தது. புத்தனார் கால்வாயின் குறுக்கே செல்லும் பாலம் இது. இந்த இணைப்புப் பாலம் உடைந்து போயுள்ளதால் தாழக்குடி, சந்தைவிளை கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இப்பகுதியில் இறந்தவர்களை எரியூட்டும் சுடுகாடும் உள்ளது. இதனால் சடலங்களைக் கொண்டுசெல்வதிலும் பெரும் சிரமம் உள்ளது. புத்தனார் கால்வாயின் குறுக்கே புதிய இணைப்புப்பாலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பணிகள் இப்போது நடைபெறாமல் உள்ளது. பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்திலேயே பணிகள் நடக்கின்றன.

இதனால் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் புத்தனார் கால்வாயில் தண்ணீர் இல்லை. இதைப் பயன்படுத்தி பணிகளை உடனடியாகத் தொடங்கி, இருமாத காலத்திற்குள் புதிய இணைப்புப் பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.