`ஆதீன கர்த்தரை தோளில் சுமந்து அடியார்கள் தாங்கிச் செல்வோம்'- ராம ரவிக்குமார்

மதுரை ஆதீனம் மற்றும் மன்னார்குடி ஜீயர் ஆகியோர்களுக்கு நடுவில் ராம ரவிக்குமார்
மதுரை ஆதீனம் மற்றும் மன்னார்குடி ஜீயர் ஆகியோர்களுக்கு நடுவில் ராம ரவிக்குமார்

களிமேடு கிராமத்திற்கு இன்று மதுரை ஆதீன கர்த்தருடன் வந்திருந்த இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில். ``மதுரை ஆதீனத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மிரட்டி வரும் போக்கை கொண்டுள்ள, ஆளும் கட்சியினர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதீனம் சொத்துகளை ஆக்கிரமித்துள்ள நபர் எந்த கட்சியினராக இருந்தாலும், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் தான்.

தொடர்ந்து ஆதீனத்துக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் போக்கு உள்ள நிலையில், ஆதீனத்தின் உயிருக்கு ஆபத்து வரும் எனில், அவரது உயிரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. பிரதமர், உள்துறை அமைச்சர் தனி கவனம் செலுத்தி, ஆதீனத்தின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து இயக்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

அதே சமயம், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசம் என்கிற ஒரு மத சுதந்திரத்தில் அரசு தலையிட கூடாது. பக்தர்களாகிய எங்களால் கொண்டாடப்பட கூடியவர்கள் குருமகாசன்னிதானங்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற அடிப்படையில், 500 ஆண்டு காலமாக நடைபெறும் பாரம்பரிய விழாவை, தடுக்ககூடிய நோக்கத்தில் மனிதனை மனிதன் சுமப்பதா என்று, திராவிட இயக்க கடவுள் மறுப்பு சிந்தனை உடையவர்களின் கோரிக்கைகளை எல்லாம் இந்த அரசு புறம் தள்ள வேண்டும்.

இந்துக்களை மிரட்டி பார்க்கும், இந்த திராவிட இயக்கங்களுக்கு எதிராக தமிழக முழுவதும் உள்ள சிவனடியார்கள், ஆதீனங்கள், சமய தலைவர்கள் உள்ளிட்டவர்களை ஒன்றினைத்து திருவாரூர் தேரோட்டம் போல பட்டினப் பிரவேசத்தை நடத்தியே தீருவோம். ஆதீனங்கள் தோளில் சுமக்க, அனைத்து அடியார்களும் தாங்கி செல்லுவோம்" என்றார்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in