
திருவள்ளுவரைக் கிறிஸ்தவராகவும், சைவ, வானவன் வழிபாட்டு முறைகளைக் கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையென மாற்றப்பட்டுள்ளதாகவும் விசுவ ஹிந்து பரிஷத்தின் முஅகில உலக இணை பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலையன், "மதுரையில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் துறவிகள் மாநாடு நடைபெறுகிறது, மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட துறவிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், இந்து அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்பு உள்ளனர்" என்றார்.
மேலும், "அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பள்ளியில் மத கருத்துக்களை கற்றுக் கொடுக்க அவரவர் மதங்களில் சமயக்கல்வியை கற்றுத்தர வேண்டும். தமிழகத்தில் மாணவர்களுக்கு முறையான கல்வி முறை இல்லாத காரணத்தால் மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்கிறார்கள். கிறிஸ்தவ பள்ளிகளில் மத மாற்றங்கள் நடைபெறுகின்றன. திருவள்ளுவரை கிறிஸ்தவர் ஆகவும், சைவ, வானவன் வழிபாட்டு முறைகளைக் கிறிஸ்தவர்களின் தோமா வழிபாட்டு முறையென மாற்றப்பட்டுள்ளது" என்று கூறினார்.