“எல்லாரும் ஓட்டு போட்டுருங்க..”: வேலம்மாள் பாட்டியின் விழிப்புணர்வு வீடியோ

“எல்லாரும் ஓட்டு போட்டுருங்க..”: வேலம்மாள் பாட்டியின் விழிப்புணர்வு வீடியோ
வேலம்மாள் பாட்டி

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிரித்த முகத்தோடு வைரல் பாட்டி வேலம்மாள் பேசும் காட்சி, கன்னியாகுமரி மாவட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

முதல்வருடன் ஜசாக்சன் ஹெர்பி
முதல்வருடன் ஜசாக்சன் ஹெர்பி

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஜாக்சன் ஹெர்பி. நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக் கலைஞரான இவர், தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண நிதி, பரிசுப்பொருட்கள் வாங்கிவந்த வேலம்மாள் என்னும் பாட்டியை புன்னகை ததும்பும் முகத்துடன் புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப் பாட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்தப் புகைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ‘இந்த சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு’ என தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். கரோனா காலத்தில் ஜாக்சன் ஹெர்பி, கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, இந்தியாவிலேயே முதன் முதலில் கரோனா நோயாளியை எரியூட்டும் காட்சிகள் ஆகியவற்றை புகைப்படம், வீடியோவாக பதிவு செய்திருந்தார். அதுவும் பெரும் கவனம் குவித்தது.

இப்போது வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அரசு இயந்திரங்கள் தீவிரமாகச் செயல்பட்டுவரும் நிலையில், ஜாக்சன் ஹெர்பி தன் பங்குக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ எடுத்திருக்கிறார். அதில் எப்போதும்போல் மலர்ந்த முகத்துடன், வேலம்மாள் பாட்டி, “எல்லாரும் ஓட்டுப் போட்டுருங்க... எல்லாரும் ஓட்டுப் போடணும்” எனச் சொல்லி புன்னகைக்கிறார்.

Related Stories

No stories found.