கழுத்தை சுற்றி பிரம்மாண்ட தங்க செயின்: மீண்டும் வைரலான வரிச்சியூர் செல்வம்!

கையில் செயினுடன் வரிச்சியூர் செல்வம்
கையில் செயினுடன் வரிச்சியூர் செல்வம்
தங்கச் செயினுடன் வரிச்சியூர் செல்வம்
தங்கச் செயினுடன் வரிச்சியூர் செல்வம்

பிரபல ரவுடியாக அறியப்படும் வரிச்சியூர் செல்வம் இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் செயினை வாங்கி அணிந்துள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். ஒரு காலத்தில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடிசம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இவர். தற்போது, எல்லாவற்றையும் துறந்து ரவுடிசத்திலிருந்து ரிட்டயர் ஆனதாக கூறப்படுகிறது.

எப்போதும், கழுத்தில் செயின், கையில் பிரேஸ்லெட், விரல்களில் மோதிரம் என தங்க நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு ஒரு நடமாடும் நகைக்கடையைப் போல வலம் வருவார். கரோனா காலத்தில் கூட, உடல் முழுவதும் தங்கம் இருந்தும், முகக்கவசம் மட்டும் துணியில் அணிந்திருந்தால் நன்றாக இருக்காது என்று 10 பவுன் தங்கத்தாலான முகக் கவசத்தை அணிந்து லாக்டவுனிலும் பிரபலமானார்.

இச்சூழலில், இந்தியாவின் மிகப் பெரிய தங்கச் செயினை வாங்கி அணிந்திருப்பது போன்ற காணொலி ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மிகப்பெரிய தங்கச் செயின் ஒன்றை கையில் எடுத்து ரசித்துக்கொண்டே அணிகிறார். மேலும், நகைக்கடை ஊழியர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in