‘எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது வருத்தமளிக்கிறது’ - சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

‘எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது வருத்தமளிக்கிறது’ - சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் மாணவர்கள் விடுதி, மாணவியர் விடுதி, நூலகக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகள் மற்றும் ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புப் பணிகளை சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், "தமிழக சுகாதாரத் துறையைப் பொறுத்தமட்டில், மதுரை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ளது. அதன் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு தோராயமாக 2025-ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதன் கட்டுமானப் பணிகள் தாமதமாவது வருத்தமளிக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in