சென்னை கடற்கரையில் ரயில் விபத்துக்கு என்ன காரணம்?- விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி

சென்னை கடற்கரையில் ரயில் விபத்துக்கு என்ன காரணம்?- விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட காரணம் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் ஓட்டுநர் பவித்ரனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 279 (உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் இயக்குதல்) மற்றும் சட்டப்பிரிவு 151 (ரயில்வே சொத்தை சேதப்படுத்துதல்), சட்டப்பிரிவு 154 (ரயில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமான செயலில் ஈடுபடுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டதாக ரயில் ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் மெக்கானிக்கல், சிக்னல் ஆப்ரேட்டிங் மற்றும் எலெக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கையை சென்னை கோட்ட ரயில்வே துறை அதிகாரிகளிடம் சம்ர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் 15 கி.மீ. வேகத்தில் தான் ரயிலை ரயில் நிலைய நடைமேடைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் விபத்து நடந்தபோது ரயில் ஓட்டுநர் 30 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் பிரேக் பழுது ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே ஓட்டுநர் பவித்ரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை கோட்ட ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in